‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாதஸ்வரம் வாசித்த பிரபலம் காலமானார்.!

RIP Ponnusamy

பிரபல நாதஸ்வர வித்வான் எம்.பி.என் பொன்னுசாமி பிள்ளை தனது 90வது வயதில் மதுரையில் காலமானார். சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த பொன்னுசாமி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 1967ல் வெளியான படம் ‘தில்லானா ‘தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில், நரம்பு புடைக்க சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும், உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், தனது சகோதரர் எம்.பி.என் சேதுராமன் உடன் இணைந்து பல இசை ஆல்பங்கள், கச்சேரிகளை நிகழ்த்தியுள்ள பொன்னுசாமி, தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்தது அப்போது அனைவரது மனதையும் கவர்ந்தது என்றே சொல்லாம்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்,இளையராஜா!

இதற்கிடையில், பொன்னுசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியபோது, தில்லானா மோகனாம்பாள் படம் குறித்த சிலவற்றை பகிர்ந்து கொண்டார். அதாவது, சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது. ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங். நகுமோ, தில்லானா, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பலவற்றை எடுத்திருந்தோம் என கூறியதோடு, சிவாஜி குறித்து சில சுவாரஸ்யமான தகலையும் பகிர்ந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs