ரசிகர்களை தெளிவாக பயன்படுத்தும் தளபதி விஜய்! மாஸ்டர் ப்ளான்!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அல்லது பொருளுதவி என செய்து வருவதோடு , அனைவரும் இதே போல் உதவ முன் வாருங்கள் என கூறியும் வருகின்றனர்.
இன்னிலையில் அங்கும் மாஸ் ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதனை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பாதிக்கபட்டட மக்களுக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் மூலம் நேரடியாக செய்து வருகிறார்.
அவர் ரசிகர்மன்றங்கள் மூலமாக அனுப்பிய பொருட்கள் லாரிகள் மூலமாக தற்போது ஒவ்வோர் ஊருக்கும் வந்து சேர்ந்துள்ளது. அதில் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் நிறைய உள்ளது. ரசிகர்களை நல்ல முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என மற்ற நடிகர்களுக்கு முன்னுதாரானமாக தளபதி விஜய் வலம் வருகிறார்.
DINASUVADU