காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே ரகசிய புரிதல்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபைகளுக்கான தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரி சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டியை தெலுங்கானா தேர்தல் களம் எதிர்கொள்கிறது. தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி சந்திரசேகர ராவ் ஹாட்ரிக் அடிப்பாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவின் ஆளுமை, 9 ஆண்டு கால ஆட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது பி.ஆர்.எஸ். தெலுங்கானா உருவாக காரணமாக இருந்தவர் என்பதால் சந்திரசேகர ராவ் மீதான அதிருப்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், ஆட்சி மீதான அதிருப்தியும், சிறும்பான்மையினரின் வாக்குகளும் கைகொடுக்கும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.!
இதுபோன்று, பிரதமர் மோடியின் பிம்பத்தை மட்டுமே முழுமையாக நம்பி பாஜக களமிறங்கியுள்ளது. இதனால் பிரதான கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். எனவே, தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில், பி.ஆர்.எஸ், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் கடந்த சில நாட்களாக அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸுக்கும், பி.ஆர்.எஸ்-க்கும் இடையே ரகசிய புரிதல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கரீம்நகர் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸுக்கும், பி.ஆர்.எஸ்-க்கும் இடையே ரகசிய புரிதல் இருக்கிறது. தெலுங்கனா சட்டப்பேரவையில் மீண்டும் சந்திரசேகர் ராவ் முதல்வராக காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும். இதனால் காங்கிரஸுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பி.ஆர்.எஸ் கட்சிக்கே செல்லும். இதுபோன்று நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க பி.ஆர்.எஸ் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் . காங்கிரஸ், பி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள் ஊழல் மற்றும் குடும்ப அரசியலை ஊக்குவிக்கும். அதனால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.