கைவிரித்த உச்சநீதிமன்றம்… அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

senthil balaji

அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

அதன் பிறகு அவர் பொறுப்பு வகித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில், செந்தி பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு, நீதிமன்ற காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதிலிருந்து செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

‘நம்மைக் காக்கும் 48’ – 2 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த இரு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனிடையே, சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு காரணமாக தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சை தொடர்பான அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.  அதாவது, ஜாமீன் மனுவை பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவித்ததை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

52மீ துளையிடபட்டுள்ளது… இன்று நல்ல செய்தி வரும்.! உத்தரகண்ட் முதல்வர் நம்பிக்கை.!

செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சனைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாமே என கூறிய நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு மனுதாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவ காரணிகளை ஆராய்ந்து இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும் என கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம். இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்