லோகேஷ் கனகராஜ் தயாரிக்க போகும் முதல் படம் யாருடைய படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவர் ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவர் புதிதாக தொடங்கியுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘GSquad’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் நேற்று லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். எனவே, இயக்குனராக கலக்கி வந்த லோகேஷ் இனிமேல் படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் கலக்க இருக்கிறார்.
எம்.குமரன் பார்ட் 2 இருக்கு…ஆனா நதியா வரமாட்டாங்க! இயக்குனர் மோகன் ராஜா அறிவிப்பு!
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக யார் நடிக்கும் படத்தை தயாரிக்க போகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக ரத்னகுமார் இயக்கும் ஒரு படத்தை தான் தயாரிக்கவுள்ளாராம். ரத்னகுமார் கடைசியாக குளு குளு எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் எழுதிய கதை ஒன்றை படமாக இயக்கவுள்ளார்.
ரத்னகுமார் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளாராம், அதைப்போலவே நயன்தாராவும் அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே, தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் பிசியாக இருப்பதால் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி அடுத்த படத்திற்கான அப்டேட்டுடன் வருகிறேன் என ரத்னகுமார் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
எனவே, அவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திரைப்படத்தை தான் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த முதல் படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.