வி.பி. சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

mkstalin

தல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பின் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வி.பி. சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் 1 தந்தை வீடு தமிழ்நாடு தான். பெரியாரின் சமூக நீதி மண்ணில் முதல்முறையாக 2 வி.பி. சிங்குக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

வி.பி. சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில், 3 அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதாமகன் வி.பி. சிங். வி.பி.சிங்குக்கு சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது, மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்துள்ளது.

வி.பி.சிங் வாழ்வு மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். 11 மாதமே பிரதமராக இருந்தாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானது. வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல, ஏழையும் இல்ல. ஆனாலும் பிற்படுத்தப்பட்ட ஏழை சமூகத்திற்காக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி காண்பித்தார்.

சமூகநீதி பயணத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அநீதி உள்ளதோ அதை தீர்க்க வேண்டிய மருந்துதான் சமூகநீதி. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகள் வேறுபடலாம், ஆனால், பிரச்சனைகள் ஒன்று தான்.

இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும். இதை கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைக்க வேண்டும். வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்