பாலியல் புகாரில் கைதான பேராசிரியர் பணியிடை நீக்கம்..!!
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து உதவிப் பேராசிரியர் தங்கப்பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த மாணவி அளித்த பாலியல் புகார் குறித்து, மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார் இதை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள்சுமார் 3 மணிநேரம் கல்லூரி முதல்வர், உதவிப் பேராசிரியர் தங்கப்பாண்டியன், விடுதி உதவி காப்பாளர்களான புனிதா, மைதிலி, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே உதவிப் பேராசிரியர் தங்கப்பாண்டியனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்வதாக கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார்.
DINASUVADU