இந்தியா முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படும் 554வது குரு நானக் ஜெயந்தி விழா.!

Guru Nanak Jayanti

இன்று இந்தியா முழுக்க சீக்கியர்களால் குரு நானக் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த ஆன்மீக குருக்களின் முதன்மையானவர் குரு நானக் இவர் பிறந்த தினத்தை குரு நானக் ஜெயந்தி என சீக்கியர்கள் ஆண்டு தொடரும் கார்த்திகை மாத பௌர்ணமியை கணக்கிட்டு கொண்டாடி வருகின்றனர்.

இன்று கார்த்திகை மாத பௌர்ணமி (நவம்பர் 27) குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தார்ஸில் உள்ள சீக்கிய கோயில், மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள் மத கோயில் குருத்வாரா என பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகள் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் பிரகாஷ் பர்வ் அல்லது குரு பர்வ் என்றும் அழைக்கப்படுகிறது.  இன்று 554வது குரு நானக் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.!

குரு நானக் தேவ் தனது முழு வாழ்க்கையையும் சமூக நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக மட்டுமே அர்ப்பணித்தவர். அவர் ஒரு ஆன்மீகவாதி என்பதை தண்டி, அவர் ஓர்  சிறந்த சமூக சீர்திருத்தவாதி என்றும் அறியப்படுகிறார். அவர் யாரிடமும் எந்தவித பாகுபாடும் வெளிப்படுத்தியதில்லை. சமூகத்தில் இருந்த ஜாதி பாகுபாடு மற்றும் மத பாகுபாடுகளை அகற்ற பல முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

குருநானக் ஜெயந்தியை குரு நானக்கை எவ்வாறு கொண்டாடுகிறோமோ அதே அளவு குரு நானக் மனைவியையும் மக்கள் கொண்டாடுகிறார்கள், குரு நானக் மனைவி பெயர் சுல்கானி தேவி. சுல்கானி தேவி 1473 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பகோக் கிராமத்தில் பிறந்தவர். குருநானக் அவர்களை குருக்ஷேத்திரத்தில் 1487 இல் திருமணம் செய்து கொண்டார். சுல்கானி தேவி குரு நானக் உடன் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது போதனைகளை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். அவர் குருநானக்  உடன் இணைந்து சமூக சேவை செய்தார். குரு நானக் போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ந்ததில் முக்கிய பங்காற்றினார்.

குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு படி, அகர்தலா, ஐஸ்வால், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், தெலுங்கானா, இட்டாநகர், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு இன்று விடுமுறை என்றும்,

மேலும் நாக்பூர், டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, காங்டாக், கவுகாத்தி, ஹைதராபாத்-ஆந்திரப் பிரதேசம், இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் பல்வேறு வங்கிகள் இன்று செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips
KKR VS LSG IPL 2025