இந்தியா, ஆஸ்திரேலியா 2-வது டி20… வெற்றியை தொடருமா இந்தியா ..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டியிலும் இந்த மூவரிடமும் இதேபோன்ற ஆட்டத்தை இந்தியா எதிர்பார்க்கும். முதல் போட்டியில் ரன் அவுட் ஆன ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகியோரும் நல்ல இன்னிங்ஸ் விளையாட முயற்சி செய்வார்கள்.  இரண்டாவதுபோட்டியிலும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பற்றி பேசுகையில், முதல் போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் சதம் விளாசினார். அதேசமயம் ஓப்பனிங் செய்ய வந்த அனுபவமிக்க பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இருப்பினும்,  ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் மோசமான நிலையில் இருந்தனர். ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் தவிர வேறு யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை.

வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்பு..?

ரவி பிஷ்னோய் மற்றும் அக்ஷர் படேல் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய போட்டியில்  சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை விளையாடும்-11 இல் இந்தியா கொண்டு வரலாம். இருப்பினும், ஒரு போட்டிக்குப் பிறகு விளையாடும்-11 ஐ மாற்றியமைப்பது சரியாக இருக்காது எனக் கூறப்படுகிறது. மறுபுறம், ஆஸ்திரேலியா அணியில் தன்வீர் சங்காவுக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பாவை ஆஸ்திரேலியா களமிறக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்