பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை.. 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை..!

சௌமியா விஸ்நாதன் (25 வயது) என்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல கடந்த 2008-ஆம் ஆண்டு  செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று காலை 3:30 மணியளவில் சௌமியா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.   அப்போது சௌமியா கொலை வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் மற்றும் அஜய் சேத்தி ஆகிய 5 பேர் மார்ச் 2009-ல் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதான ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகியோர் 2009 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜிகிஷா கோஷ் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த வழக்கில் 15 வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமாா்  மற்றும் அஜய் சேத்தி ஆகிய 5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த  கூடுதல் அமா்வு நீதிபதி ரவீந்திர குமார் பாண்டே, குற்றவாளிகளான ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய 4 பேருக்கும் ஆயுள்  தண்டனையும், தலா ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தார்.

இந்த வழக்கில் 5-வது குற்றவாளிஅஜய் சேத்திக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.7.25 லட்சம் அபராதம் விதித்தது. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.12 லட்சம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்