ஒரே நாளில் ரெட்மி கே 70 சீரிஸ் உட்பட 6 புதிய சாதனங்களை வெளியிடும் சியோமி.!

XiaomiMegaLaunch

சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, நவம்பர் 29ம் தேதி ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகிறது. இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் உள்ளன.

இப்போது இந்த ஸ்மார்ட்போன்களோடு ரெட்மி வாட்ச் 4 (Redmi Watch 4), ரெட்மி புக் 16 – 2024 (Redmi Book 16 2024) மற்றும் ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ (Redmi Buds 5 Pro) ஆகிய மூன்று சாதனங்களும் அறிமுகமாகும் என்று ரெட்மி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

ரெட்மி வாட்ச் 4

ரெட்மி வாட்ச் 4 ஆனது, இதற்க்கு முன்னதாக அறிமுகமான ரெட்மி வாட்ச் 3-ஐ விட பல ஹார்ட்வர் அப்டேட்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிறது. சியோமி வெளியிட்ட டீசரைப் பார்க்கையில், இதில் பல வாட்ச் ஸ்ட்ராப்புகள் மற்றும் பல வகையான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன என்பது உறுதியாகிறது.

5000 mAh பேட்டரி.. 100 வாட்ஸ் சார்ஜிங்.! வெளியானது ரியல்மீ 12 ப்ரோ+ அம்சங்கள்.!

சதுர வடிவ டிஸ்ப்ளே உள்ள இதில் ஒரு கருப்பு டயல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பட்டன் உள்ளது. அதோடு இதயத் துடிப்பு, ஸ்டெப்ஸ், கலோரிஸ் போன்றவற்றை அளவீடு செய்து கண்காணிக்கும் அமைப்பும் உள்ளது.

ரெட்மி புக் 16 (2024)

ரெட்மி புக் 16 (2024) லேப்டாப் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமிங் லேப்டாப் ஆகும். இதில் மூன்று யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள், ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. இதில் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியம் உள்ளது. ரெட்மி புக் 16 (2024) ரூ. 58,000-க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம்.

ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ

ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ ஆனது ரெட்மி பட்ஸ் 4 ப்ரோவின் அப்டேட்டட் வெர்சன் ஆகும். இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ஏஎன்சி) இருப்பதால் இரைச்சல் இல்லாமல் பாடல்கள் கேட்கவும், கால் பேசவும் முடியும். சியோமி புதிய ப்ரோ மாடலில் அதிக மைக்ரோஃபோன்களைச் சேர்த்துள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ்-ன் பட்ஜெட் போன்.! என்ன மாடல்..எப்போ அறிமுகம் தெரியுமா..?

ரெட்மி கே70 சீரிஸ்

இதில் இருக்கக்கூடிய ரெட்மி கே70 ப்ரோ ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம். அதோடு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. கே70 ப்ரோவில் அட்ரினோ ஜிபியு-உடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும்.

இதற்கிடையில், ரெட்மி கே70இ மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது 1,800 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். அதோடு 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

ரெட்மி கே7 சீரிஸின் மூன்று மாடல்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சியோமியின் ஹைப்பர் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இத்தகைய அம்சங்களுடன் கூடிய சாதனங்களை அனைத்தும் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் சியோமி பயனர்கள் நவம்பர் 29ம் தேதி எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்