போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்ற பிள்ளைகளை விற்ற கொடூர பெற்றோர்..!

arrested

மும்பையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைங்களை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஷபீர் மற்றும் சானியா கான் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர்.

போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர். தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர்.

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..!

சம்பவம் குறித்து தம்பதியின் குடும்பத்தினர் அறிந்தவுடன், கதை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் மற்றும் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஷபீர்கான், அவரது மனைவி சானியா, உஷா ரத்தோர், ஷகீல் மக்ரானி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், அவர்களால் போதைப்பொருள் இல்லாமல் வாழ முடியாது.  தம்பதியினர் தங்கள் மகனை ரூ.60,000 க்கு ஒரு நபருக்கு விற்றனர். குழந்தைகளை யாருக்கு விற்கப்பட்டது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும், இந்த தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையை, சிறுமியை குற்றம் சாட்டப்பட்ட ஷகீல் மக்ரானிக்கு கடந்த மாதம் ரூ.14,000-க்கு விற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்