ரோஹித் ஷர்மா கண்டிப்பாக இன்னொரு உலகக் கோப்பையில் விளையாடுவார்.! முத்தையா முரளிதரன்
ஒருநாள் உலக கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரைத் தொடர்ந்து, 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆனது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும். உலக அளவில் தலைசிறந்த 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஏற்கனவே 18 நாடுகளின் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
போட்டியின் கடைசி ஓவரில்.. தோனி கூறிய அறிவுரை இதுதான்.! ரிங்கு சிங் ஓபன் டாக்.!
இதற்கிடையில் 2022ம் ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 ஐ விளையாடாததால், இந்த டி20 உலக கோப்பைத் தொடரிலும் பங்கேற்கமாட்டார்கள் எனத் தகவல்கள் வெளியானது. இதற்கு விளக்கமளித்த பிசிசிஐ, ரோஹித் மற்றும் கோலி இருவரும் விரும்பினால் அடுத்த ஆண்டு டி20 மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம்.
முடிவு செய்ய முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கண்டிப்பாக விளையாடுவார் என்று தான் நினைப்பதாகக் கூறியுள்ளார்.
IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய முத்தையா, “ரோஹித் ஷர்மாவின் ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தை நீங்கள் பாருங்கள். போட்டியின் தொடக்கத்தில் அவர் அதிரடியாக பேட் செய்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றார். போட்டியில் அவர் தோல்வியடைந்ததில்லை. மேலும், அவருக்கு 36 வயதுதான் ஆகிறது. விராட் கோலியைப் போல உடற்தகுதியை வலுப்படுத்தினால் அவர் மற்றொரு உலகக் கோப்பையை விளையாடலாம்.” என்றார்.
மேலும், “ஒருநாள் போட்டிகளில் 130 ஸ்டிரைக் ரேட்டுடன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்தார். இந்த ஃபார்ம் டி20க்கு போதுமானது. அவர் அனுபவம் வாய்ந்த வீரர். 35 வயதிற்குப் பிறகு உங்கள் உடற்தகுதிக்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அவருக்கு ஆசை இருந்தால், நிச்சயமாக இன்னொரு உலகக் கோப்பையை விளையாடுவார் என்று நினைக்கிறேன்.” என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.