முதல் முத்தம் அவர் கூட தான் நடந்துச்சு! உண்மையை உளறிய பிரியா பவானி சங்கர்!
நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கிறார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து கொண்டிருந்த இவருக்கு மேயதா மான் திரைப்பதில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், யானை உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பிரியா பவானி சங்கர் தனிப்பட்ட கேள்வியான முதல் முத்தம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில் முதல் முத்தம் யாருடன் என்ற கேள்வியை தொகுப்பாளர் அவரிடம் கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை பிரியா பவானி சங்கர் ” இந்த கேள்விக்கு எல்லா நடிகைகளும் ஒரே மாதிரியான பதிலை தான் சொல்வார்கள்.
பட வாய்ப்புகளே இல்லை! கவர்ச்சி நடிகையுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?
எப்படி என்றால் என்னுடைய அம்மாவுக்கு தான் முதல் முத்தம், என்னுடைய அப்பாவுக்கு தான் முதல் முத்தம் நாங்கள் சின்ன வயதாக இருந்த போது கொடுத்தோம் என்று தான் சொல்வார்கள். என்னுடைய முதல் முத்தம் முதல் காதலருடன் நடந்தது. அது தான் என்னுடைய முதல் முத்தம்” என சற்று வெட்கப்பட்டு கொண்டே உண்மையை கூறியுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். இதனை அதிகாரப்பூர்வமாகவே அவர் தெரிவித்துவிட்டார். குறிப்பாக சமீபத்தில் கூட தன்னுடைய தோழியின் திருமண விழாவிற்கு தன்னுடைய காதலருடன் சென்று இருந்தார். அந்த புகைப்படங்களும் வைரலானது.
மேலும், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடைசியாக வெளியான பொம்மை திரைப்படம் பெரிய அளவில் விமர்சனங்களை பெறவில்லை இந்த படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது டிமான்டே காலனி 2, இந்தியன் 2, பீமா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.