இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்… என்னென்ன ஆவணங்கள் தேவை?

voter special camp

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தீப திருவிழா காரணமாகதிருவண்ணாமலையில் மட்டும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-ஐ சமீபத்தில் அறிவித்தது.

இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ அக்.25ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 2024க்கான சிறப்பு சுருக்க முறை திருத்த கால அட்டவணையை அந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல.! அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி.!

அதன்படி, அக்.27ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 9ம் தேதி வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலமாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து,  கடந்த நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

காங்கிரஸ் vs பாஜக : ராஜஸ்தானில் தொடங்கியது விறுவிறு வாக்குப்பதிவு.!

இந்த நிலையில், இன்றும் நாளையும் 2ம் கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. வாக்குச்சாவடி அமைக்கப்படும் இடங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இன்று நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு செல்பவர்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகிய அடையாள சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது டிஎல் அல்லது பயன்பாட்டு பில் ஆகிய முகவரிச் சான்றிதழ்களையும் அவசியம் வழங்க வேண்டும். வரும் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. இதனால், அது இருந்தாலும், இல்லனாலும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025