சந்தானத்தின் “80ஸ் பில்டப்” வெற்றியா? வெறும் பில்டப்பா? விமர்சனம் இதோ…

Santhanam '80s Buildup' Review

சந்தானத்தின் ’80ஸ் பில்டப்’ திரைப்படம் இன்று (நவம்பர் 24 ஆம் தேதி) திரையரங்குகளில வெளியானது. குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற காமெடிய மையப்படுத்திய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள, ’80ஸ் பில்டப்’ படத்தில் நடிகர் சந்தனத்தை தவிர, நடிகை ராதிகா ப்ரீத்தி, மன்சூர் அலி கான், ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1980களை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர ரசிகராகவும், அவரது தாத்தா ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவும் காட்டப்பட்டுள்ளது. இயக்குனர் கற்பனைக் கூறுகளுடன் கூடிய நகைச்சுவைப் படமாக, ஒரே நாளில் நடக்கும் கதையாக உருவாக்கியுள்ளார்.  இப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா?அல்லது சோதனையை தந்ததா என்று பார்க்கலாம்.

படத்தின் கதைக்களம்

80ஸ்-களில் பயங்கர கமல் ரசிகராக வரும் சந்தானம். அவரது தாத்தா சுந்தர்ராஜன் அவரது ஊறில் பெரிய ஜமீன்தார் குடும்பத்தைச் சார்ந்தவர். அந்த குடும்பத்தின் பரம்பர கத்தி ஒன்றை திருட, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் கும்பல் ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறது.

மறு பக்கம் அந்த கத்தியை திருட வரும்போது கற்கண்டு என நினைத்து வைர கற்களை விழுங்கி, இறந்து போகிறார் சந்தானம் தாத்தா (சுந்தர்ராஜன்). இதனையடுத்து, உயிரிழந்த தாத்தா சந்தானம் தாத்தாவிடம் (சுந்தர்ராஜன்) இருக்கு அந்த வைர கற்களை திருட எப்போடா வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கிறது அந்த திருட்டு கும்பல்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம்…சொந்தக்காரியாக வரும் ராதிகா ப்ரீத்தியை மடக்க முடியுமா என்று சந்தானத்தின் சகோதரி பெட் கட்ட அதில் சந்தானம் வென்றாரா….இல்லையா…என்பதை படத்தின் மீதி உள்ள கதை.

விமர்சனம்

சந்தானம் படம் என்றால் காமெடிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே திரையரங்கிற்கு செல்லும், இங்கு காமெடிக்கு என்று தனி பட்டாளம் உள்ளது ஆனா ஏன் என்று கேள்வியை எழுப்பிலுள்ளது. முதல் பாதி ஓகே என்றால், இடைவெளி கொஞ்சம் ஓகே என்று சொல்ல…இரண்டாம் பாதியில் சரக்கு இல்லாமல் தொய்வை ஏற்படுத்தியுள்ளது. கிளைமாக்ஸ் பெரிய சலிப்பை ஏற்படுத்துகிறது.

காதலர்கள் கொண்டாடி தீர்க்க வந்துவிட்டது ‘ஜோ’.! மனதை உருக்கும் திரை விமர்சனம் இதோ…

சொல்லப்போனால், ஒற்றை ஆளாக படத்தை சந்தானம் கொண்டு சென்றாலும், படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியர்கள் பட்டாளம் ஏன் இந்த முறை இவ்வாறு சொதப்பியுள்ளது என தெரியவில்லை. அது இயக்குனரின் கையில் தான் உள்ளது, சரியாக வேலை வாங்கயிருந்தால் அனைவரும் தரமாக உழைத்திருப்பார்கள். அது மட்டும் இல்லாமல், இயக்குனரால் திரைக்கதையை படத்தையும் பெரிதாக ரசிக்க வைக்க முடியவில்லை.

பிளஸ்

வழக்கம் போல கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிந்தும் சிதறாமலும் பக்குவமாக நடித்திருக்கிறார். இசையும் பாடல்களும் ஒரு அளவுக்கு ஓகே. சில காமெடிகள் சிரிக்க வைத்திருக்கிறது.

80ஸ் பில்டப் முதல் துருவ நட்சத்திரம் வரை..! நாளை வெளியாகவுள்ள அட்டகாசமான திரைப்படங்கள் இதோ.!

மைனஸ்

ஆடி ஒன்னு அம்மாவாசை ஒன்னு என்பது போல, மன்சூர் அலி கான் வந்து செல்வது ஏன் என்றே தெரியவில்லை. சந்தானத்தை தவிர மற்ற கதாபாத்திரங்கள் ஏன் இருக்கிறது என்றெ யோசிக்க வைக்கிறது. ஒரு நல்ல காமெடி கூட இல்லை, அதே போல, படத்தில் சிலர் கிரிஞ்ச் தனமாக செய்யும் விஷயங்களும், பெண் வேடத்தில் வரும் (ஆனந்த்ராஜ்) போர்ஷன்கள் ஒர்க் ஆகவிலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்