சும்மா வசனம் பேசினால் மட்டும் போதாது…பீகாரைப் போலவே தமிழ்நாட்டிலும்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

பீகார் மாநிலத்தை போலவே தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ஐய்யா ராமதாஸ் அவர்கள் 40 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்.
இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான போராட்டங்கள், அழுத்தங்கள், அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி எம்ஜிஆர், ஜானகி, ஆளுநர் ஆட்சி பிசி அலெக்ஸாண்டர், கலைஞர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தபோது பலமுறை சந்தித்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக முதலமைச்சர்களை கடந்த 40 ஆண்டு காலமாக சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்தார். சமீபத்தில் முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அதிகாரமில்லை. மத்திய அரசுதான் இதனை செய்யவேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி.! மம்தா கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் எம்.பி ஆதரவு.!
எங்களை பொறுத்தவரை அது தவறான கடிதம். தமிழக அரசு சென்செசுக்கும், சர்வேவுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். சென்சஸ் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சட்டப்படி இதனை மத்திய அரசுதான் எடுக்க முடியும், மாநில அரசு எடுக்க முடியாது. ஆனால், 2008 indian statistical act-யின்படி சர்வே என்பதை மாநில அரசு எடுக்கலாம். இதனடிப்படையில் தான் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினார்கள், இதற்கு அம்மாநில ஐகோர்ட் ஆதரவு அளித்தது.
அதேபோல் உச்சநீதிமன்றமும் எந்த தடையும் கொடுக்கவில்லை. பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்துவிட்டு, இடஒதுக்கீட்டை 72 சதவீதமாக உயர்த்தியுள்ளார்கள். இதற்கு ஆளுநர் கையெழுதியிட்டுள்ளார். தமிழகத்தில் மட்டுமே தனி சட்டம் என பேசிக்கொண்டிருப்பது எங்களுக்கு புரியவில்லை.
நாங்கள் தான் தந்தை பெரியார் உடைய வாரிசு, சமூகநீதி எங்களுடைய உரிமை, தமிழ்நாடு சமூகநீதியின் தொட்டில் என இப்படியெல்லாம் வசனம் பேசினால் போதாது, அடிப்படை சமூகநீதி என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினரும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தலை கணக்கெடுப்பு கிடையாது.
எந்த சமுதாயம் எந்த நிலையில் உள்ளது, எந்த நிலையில் பின்தங்கி இருக்கிறார்கள், எந்த சமுதாயம் அதிக குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வேலைவாய்ப்பு இருக்கிறதா இல்லையா?, அவர்கள் வீடுகளில் கழிப்பறை உள்ளதா? குடிநீர் வசதி இருக்கிறதா? என்பது குறித்து கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். அதற்கேற்ப சமூகநீதி நடவடிக்கை எடுத்தால் தான் உண்மையான சமூகநீதி அரசாக இருக்கும்.
சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!
வெறும் பேச்சு அளவில் சமூகநீதி பேசினால் போதாது. இதை எடுப்பதற்கு அரசுக்கு என்ன பிரச்சனை?, பீகார், ஒடிசா, கர்நாடகாவில் எடுத்துவிட்டார்கள், ஆந்திராவில் சமீப நாட்களாக எடுத்து வருகிறார்கள், தெலுங்கானா, ராஜஸ்தானில் அறிவித்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அறிவிக்கவில்லை, சமூகநீதி குறித்து பேசினால் போதாது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், இல்லையென்றால் காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவசியமானது. இதுதான் சமூகநீதிக்கு அடித்தளம். எந்த அடிப்படையில் நலத்திட்டங்களை கொடுத்து வருகிறீர்கள். பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு கணக்கெடுப்பு, பறவைகள் கணக்கெடுப்பு, தெருநாய்கள் கணக்கெடுப்பு உள்ளிட்டவைகளுக்கு கணக்கெடுப்பு நடத்துறீங்க, சமூகநீதிக்கு கணக்கெடுப்பு நடத்த முடியாதா? என கேள்வி எழுப்பினார்.
எந்தெந்த மக்கள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதுக்கு கணக்கெடுப்பு நடத்த முடியாதா?, முடியும். ஆனால் மனசு இல்லை. அதிகாரம் இருக்கிறது, சட்டம் இருக்கிறது, நிதி இருக்கிறது, மனசுதான் கிடையாது. இதனால் தமிழ்நாட்டில் உடனடியாக முதலமைச்சர் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும், அதுவரை பாமக பல்வேறு விதமான அழுத்தங்கள், போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025