சென்னையில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி..!
சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறிநாய் கடித்த 28 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் பகுதியில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த நாய் கடித்த 28 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பலரையும் விரட்டி விரட்டி கடித்து வைத்த அந்த தெரு நாய் அப்பகுதியினரால் அடித்துக்கொல்லப்பட்டது.
இதனையடுத்து, அந்த நாயை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். ன் சோதனையில், நாய்க்கு ரேபிஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாய் 13 ஆண்கள், 15 பெண்கள் என 28 பேரை நாய் கடித்துள்ளது.
முதல்கட்டமாக அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் குறிப்பிட்ட இடைவெளியில் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மக்களுக்கு ரேபிஸ் தொற்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த 25 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.