தமிழகத்தில் மணல் கொள்ளை.? I.A.S அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்.! தமிழக அரசு வழக்கு.!

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளுவதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் கூறி கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் பல்வேறு தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்க பணம், 1000 கிராம் அளவில் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இந்த சோதனையை தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை பதிலளிக்கவும், குறிப்பிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் பதில் கூறவும் அமலாகித்துறை சம்மன் அனுப்பியது.
ஆட்டோ ஓட்டுநரின் அசாத்திய தைரியம்.! சென்னையில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணம்.!
சேலம், செங்கல்பட்டு, புதுகோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
மணல் எடுக்கும் விவகாரம் என்பது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கீழ் வராது. அமலாக்கத்துறை தங்கள் வரம்பை மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள் கிழமை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.