இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை… தஞ்சாவூர் பெண்ணிற்கு கிடைதத கெளரவம்.!

கின்னஸ் உலா சாதனை என்பது உலக மக்களால் பலவேறு அசாத்திய சாதனைகள் என அண்ணார்ந்து பார்ப்பது போலவும், சில நேரத்தில் இதிலெல்லாம் சாதனையா என்றவாறு புருவத்தை தூக்கும் நிலையிலும் இருக்கும். இதனையெல்லாம் விடுத்தது தஞ்சாவூர் இளம் பெண்ணின் சாதனை வாயை பிளக்க வைத்துள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த கல்பனா பாலன் எனும் 26வயது இளம்பெண் உலகிலேயே அதிக பற்கள் கொண்ட பெண்மணி எனும் வித்தியாசமான சாதனையை படைத்தார். அவரது வாயில் மொத்தம் 38 பற்கள் முளைத்து இருந்துள்ளன.
பொதுவாகவே மனிதனுக்கு 32 பற்கள் இருக்கும். கல்பனாவுக்கு வழக்கத்தை விட ஆறு பற்கள் அதிகமாக உள்ளது. கல்பனாவுக்கு இப்போது இரண்டு கீழ் தாடை பற்கள் மற்றும் இரண்டு மேல் தாடை பற்கள் ஆகியவை முளைத்து உள்ளன.
உலகிலேயே அதிக பற்கள் கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் உலக சாதனை பட்டத்தை பெற்ற பிறகு கல்பனா பாலன் கூறுகையில், “கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது வாழ்நாள் சாதனை” என்று கூறினார்.
இன்னும் இரண்டு பற்கள் அவருக்கு வளரவேண்டியுள்ளதால், வருங்காலத்தில் கல்பனாவின் சாதனையை அவரே முறியடித்து சாதனை படைப்பார். உலகிலேயே அதிக பற்கள் கொண்ட ஆண் என்ற சாதனையை கனடாவை சேர்ந்த எவானோ மெலோன் என்பவர் படைத்துள்ளார். அவருக்கு மொத்தம் 41 பற்கள் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025