தொடர்ந்து பதற்றமான சூழலில் ஜம்மு..! காவல் ஆய்வாளரின் வீட்டிற்குள் புகுந்து தீவிரவதிகள் துப்பாக்கி சூடு..!!
புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது அஷ்ரப் தார் என்பவர் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, முகமது அஷார்ப் தார் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த தீவீரவாதிகள் வீட்டிற்குள் புகுந்து கண்மூடித்தனமாக அவரை சுட்டனர். அதில் அவர் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 காவலர்கள், தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து தீவிரவாதிகளைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
DINASUVADU