ஐபிஎல்லில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்… சிஎஸ்கே அறிவிப்பு ..!
ஐபிஎல் 17 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 26ம் தேதி அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏலத்திற்கு முன் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றுக்கொள்ளலாம். இதனால் ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறை மூலம் வீரர்களை விற்றும், வாங்கியும் வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு அதாவது 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் இந்தியா உடனான 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடர், டி20 உலகக்கோப்பை ஆகியவை கருத்தில் கொண்டு பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளதாக சென்னை அணி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
???? NEWS FROM THE PRIDE????
Read More ⬇️
— Chennai Super Kings (@ChennaiIPL) November 23, 2023
இங்கிலாந்து ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஏலத்தில் சென்னை அணி 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த தொடரில் காயம் காரணமாக 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணிக்காக விளையாடினார். ஜனவரி 24 முதல் மார்ச் 11 வரை இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.