அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்… இந்தியர்களுக்கு 3ஆம் இடம்.!

illegal immigrants

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்றும் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வசித்து வருவதாகவும் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் 6.4 மில்லியன் (64 லட்சம்) பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதில், இந்தியர்கள் மட்டும் 7,25,000 பேர் சட்டவிரோதமாக குடியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சட்டவிரோத குடியேற்றத்தில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில உள்ளனர். மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களின் எண்ணிக்கை 1.02 கோடியை எட்டியது.

இது 2021ம் ஆண்டு 1.05 கோடியாக அதிகரித்தது. அதன்படி, 2021-ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகையில் 14.1 சதவீதம் போ் வெளிநாட்டவா்கள் என்றும் இதில் சட்டவிரோதமாக 1.05 கோடி பேர் குடியேறி உள்ளனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமாா் 3 சதவீதமாகவும், மொத்த வெளிநாட்டவா்கள் எண்ணிக்கையில் 22% ஆகவும் உள்ளது என ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது.

சீனாவில் நிமோனியா… மருத்துவமனையில் நிரம்பி வழியும் குழந்தைகள்.. அறிக்கை கேட்ட WHO..!

அதே சமயத்தில், அமெரிக்காவில் சட்டப்படி குடியேறியவா்களின் எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் மீள் உள்ளது சென்று 29 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 2021ம் ஆண்டு புள்ளி விவரங்கள்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக (6.4 மில்லியன்) குடியேறியவா்களில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்தவா்கள் முதலிடத்தில் உள்ளனா். இரண்டாவது இடத்தில் எல் சால்வடாா் நாட்டைச் சோ்ந்தவா்களும், அதுபோல மூன்றாவது இடத்தில் இந்தியா்களும் உள்ளனா்.

அதாவது, 2021-இல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நாட்டவா்களின் எண்ணிக்கையில் மெக்ஸிகோ 41 லட்சம் போ், எல் சால்வடாா் 8 லட்சம் போ், இந்தியா 7.25 லட்சம் போ் கெளதமாலா 7 லட்சம் போ் ஹோண்டுராஸ் 5.25 லட்சம் போ் உள்ளனர். இதனிடையே, 2007 முதல் 2021-ஆம் ஆண்டு வரை உலகின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

இதில் குறிப்பாக மெக்சிகோவைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் உள்ள சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் மொத்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் தரவுகள், ஏராளமான ஆவணமற்ற இந்தியக் குடியேற்றவாசிகள் அமெரிக்க எல்லை வழியாக கால்நடையாகக் கடப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது.

அக்.2022 முதல் செப்.2023 வரை ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததற்காக 6,917 இந்தியர்கள் கைது அல்லது  வெளியேற்றப்பட்டனர் அல்லது நுழைய மறுக்கப்பட்டது.கொரோனாவுக்கு பிறகு அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar