இன்று கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்..!
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது.
டெல்லியில்இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை… 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!
இந்த கூட்டம் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த 30-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ந.22 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கன அடி நீரை திறக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறக்குமாறு கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.