ஸ்டீவ் ஸ்மித்தை மீண்டும் விரட்டியடித்த விராட் கோலி…!மீண்டும் தரமான முதலிடத்தை பிடித்த விராட் …!

Default Image
மீண்டும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.இரண்டாவது இன்னிங்சிலும் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
Image result for virat kohli vs steve smith
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்தார். 934 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்தார் .அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929ரேட்டிங்வுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
Image result for virat kohli vs steve smith
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்தவர்  ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆவார்.யாருமே அசைக்க முடியாத அளவில் அவர் இருந்தார்.இவரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் இரண்டாவது டெஸ்டில் இந்திய  அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில்  படுதோல்வியை சந்தித்தது.
இதில் விளையாடிய  விராட் கோலி சொதப்பலான ஆட்டத்தை ஆடினார் .இதனால் டெஸ்ட் தரவரிசை  பட்டியலில் முதலிடத்தில் இருந்த அவர் இந்திய அணியின் தோல்வியின் காரணமாக 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.இந்த போட்டியின் முதலாவது மற்றும் இரண்டாவது இன்னிங்சில் விராட் 97 மற்றும் 103 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் அவர் 937 ரேட்டிங்வுடன் மீண்டும் முதலிடம் பிடித்தார். மேலும் இந்திய வீரர் பூஜார 791 ரேட்டிங்வுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்