விடுதலைக்காக என்ட்ரி கொடுத்த அசுரன் சிதம்பரம்.! அப்போ விஜய் சேதுபதி மகன்?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில், இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘விடுதலை’ இரண்டாம் பாகம் மீண்டும் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில், நடிகர் சூரி ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளதை வீடியோ மூலம் படக்குழு அறிவித்தனர். இப்பொது, சிறுமலையில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் போர்ஷன்கள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் அருகே சிறுமலை காடுகளில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குமரேசன் ரெடி.! விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்புக்கு தயாரான நடிகர் சூரி!
அதாவது, இந்த படத்தில் திடீரென கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரல் நடிக்க கதையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ‘அசுரன்’ படத்தில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதில் இடம்பிடித்த கருணாஸ் மகன் கெனுக்கு இந்த படத்துக்குப் பிறகு, மிகப்பெரிய பார்வை கிடைக்கும் என வெற்றிமாறன் நம்பிகை வைத்திருந்தாராம்.
ஆனால், அவர் இன்னும் திரையுலகில் தனக்கென ஓரிடத்தை பிடிக்க முடியாமல் தவிப்பதால், மீண்டும் அவருக்கு கைகொடுக்கும் முயற்சியாக ‘விடுதலை-2’ படத்தில் களமிறக்கியுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்திற்கு தயாராகும் விடுதலை-2.! ஷங்கரை ஃபாலோ செய்யும் வெற்றிமாறன்.!
இதற்கிடையில், இதன் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதுபோல் அவரும் இந்த படுத்தில் விஜய் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால், இப்பொது, அசுரன் சிதம்பரமான கருணாஸ் மகன் கென் கருணாஸ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் யாரை விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இல்லையென்றால், இருவருமே படத்தில் நடிக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர்
அதாவது, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் படத்தில் வரும் பிளேஷ்பேக் காட்சிகளில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் கதாபாத்திரம் 1960களில் அமைக்கப்படவுள்ளதால் ‘டி ஏஜிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காட்ட இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.