பிரமாண்டமாக ரெடியாகும் ‘புஷ்பா 2’ ! குஷியில் அடுத்த படத்திற்கு தயாரான அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக பிரபல இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்கனவே, அல வைகுந்தபுரமுலோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே, அல்லு அர்ஜுன் மீண்டும் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அல வைகுந்தபுரமுலோ படத்தை தவிர்த்து அத்தாரிண்டிகி தாரேடி, அரவிந்த சமேத வீர ராகவா, ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார். இந்நிலையில், அவர் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து கதை ஒன்றை கூறிருக்கிறாராம். அந்த கதை அவருக்கு பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.இந்த படம் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாம்.
கஷ்டங்கள் எல்லாம் போச்சு! ரொம்ப நன்றி…உற்சாகத்தில் நடிகை ஹன்சிகா!
இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல நடிகையான த்ரிஷாவிடம் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். படம் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ள காரணத்தால் அவரை போல ஒரு நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், நடிகை த்ரிஷா கடைசியாக விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், த்ரிஷாவுக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக் லைஃப் படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.