20 மாவட்டங்களில் மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
நேற்று இரவு முதல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி , கோவை , திருப்பத்தூர், சேலம் , தேனி விருதுகர் என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இன்று காலை வரையில் இந்த மழை நீடித்தது.
கனமழை… விடுமுறை இல்லை.. மாணவர்கள் ஏமாற்றம்.!
இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், தஞ்சை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்கள் என 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் , திருநெல்வேலி, தென்காசி, கன்னியகுமார் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகம் தவிர, கேரளா, புதுச்சேரியிலும் கனமழை எச்சரிக்கை வடுக்கப்பட்டுள்ளது.