கிரிக்கெட்டில் புதிய விதி.. எதிரணிக்கு 5 ரன்கள்.. ஐசிசி அறிவிப்பு..!

2023 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விதிகளை ஐசிசி மாற்றியுள்ளது. போட்டியின் வேகத்தை அதிகரிக்க புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு போட்டியில் ஒரு ஓவர்முடித்து அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடம் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மூன்று முறை அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டால் பந்துவீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகக் குழு ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த விதி தற்போது ஆண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில்  பொருந்தும். முதற்கட்டமாக இந்த விதி சோதனைக்காக அமல்படுத்தப்பட்டு அதன் பயன் மற்றும் தீமைகள் கருத்தில் கொண்டு நிரந்தரமாக அமல்படுத்தலாம் என  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. இந்த விதி டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டிங் அணி நன்மை:
பேட்டிங் அணிக்கு இந்த புதிய விதிமுறையால் பயனடையும். ஒரு ஓவர் முடிந்த பிறகு இரண்டாவது ஓவர் தொடங்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு மேல் எடுக்கக்கூடாது அப்படி ஒரு போட்டியில் மூன்று முறை ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்தால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். இதனால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். ஒரு சில போட்டிகளில் முடிவை மாற்ற 1 ரன் கூட தேவைப்படும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த விதி அந்த அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்லோ ஓவர் ரேட் விதி அமலில் உள்ளது:
ஒருநாள் போட்டிகளில், பந்துவீச்சாளர்களுக்கு 50 ஓவர்கள் வீச 3.5 மணி நேரம் வழங்கப்படுகிறது. அதேசமயம், டி-20யில், 20 ஓவர்கள் பந்து வீச ஒரு அணிக்கு  1 மணி நேரம் 25 நிமிடங்கள் கிடைக்கும். எந்த அணி சரியான நேரத்தில் ஓவர்களை முடிக்கவில்லை என்றால், அந்த அணிக்கு ஸ்லோ ஓவர் ரேட் விதியின் காரணமாக
ஐசிசி நடத்தை விதி 2.22ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
அபராதம்:

ஒரு சீசனில் முதல் முறை தவறு செய்தால், பந்துவீச்சு அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரு சீசனில் இரண்டாவது முறை தவறு செய்தால், பந்துவீச்சு அணியின் கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரு சீசனில் மூன்றாவது முறை தவறு செய்தால், பந்துவீச்சு அணியின் கேப்டனுக்கு 30 லட்சம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்