ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு அமைப்பு …!தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.கே.வசிஷ்டர் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாககடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவு பிறப்பித்தது.குழு ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவு எடுக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன் பின் வாதாடிய வேதாந்தா நிர்வாகம், ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்தது.மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் வாதிட்டது.ஆனால் இதற்கு மறுத்துவிட்டது.
இறுதியாக ஓய்வுபெற்ற நீதிபதி ச தலைமையிலான குழு 6 வாரங்களில் ஆய்வு செய்து முடிவெடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.கே.வசிஷ்டர் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் நீதிபதி எஸ்.கே.வசிஷ்டர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ஆவார்.மேலும் இவருக்கு கீழ் இரண்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
DINASUVADU