வேலியே பயிரை மோய்ந்த கொடூரம்..!கல்லூரி பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை..!!மாணவி புகார்..!!
திருவண்ணாமலை அருகே கல்லூரி பேராசியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு தன்னை தவறான பாதைக்கு விடுதிகாப்பாளர் அழைத்ததாக அரசு வேளாண்மை கல்லூரி மாணவி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் அமைந்துள்ளது அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகின்றது. இதில் கல்லூரி விடுதியில் தங்கி சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை ஒப்படைக்க சமர்பிக்கச் பேராசிரியரிடம் சென்ற அம்மாணவிக்கு பேராசிரியரியரும் விடுதி கண்காணிப்பாளருமான தங்கபாண்டியன், ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, உதவி விடுதி கண்காணிப்பாளர் புனிதா மற்றும் உதவியாளர் மைதிலி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.ஆனால் அவர்களோ மாணவியின் புகாரை கண்டுகொள்ளாமல் விடுதி உதவி கண்காணிப்பாளர் புனிதா, கல்லூரி விடுதி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்றும், மாணவிகள் தான் பொறுத்துச் செல்ல வேண்டும் என்று அலச்சியமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்த மாணவி தன்னை விடுதி கண்காணிப்பாளர் பேராசியர் தங்கபாண்டியன், மற்றும் கண்காணிப்பாளர் புனிதா ஆகியோர் தொடர்ந்து தவறான பாதைக்கு அழைத்ததாகவும், தனது படிப்பை பாதியில் நிறுத்தி வெளியில் அனுப்பி விடுவதாக மிரட்டுவதாகவும் அம்மாணவி கூறியுள்ளார்.
இதனிடையே, மாணவியின் புகாரை கல்லூரி நிர்வாகத்தினர் முழுமையாக மறுத்துள்ளனர். கல்லூரி விடுதியில் மாணவியின் செயல்பாடுகள் தவறாக இருந்ததை கண்காணிப்பாளர் தங்கப்பாண்டியன் கண்டித்ததால், அவர் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கல்லூரியின் முதல்வரான ராஜேந்திரன் கூறியுள்ளார்.
DINASUVADU