முல்லை பெரியாறு 2ஆண்டுக்கு பின் 18 -ம் கால்வாயை..! துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்..!!
கேரளா பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணை கிடுகிடுவென நீர்மட்டம் உயர்ந்தது.இதனிடையே விவாசயிகளின் பாசனத்துக்கு இன்று நீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.இதனையடுத்து இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முல்லை பெரியாரின் 18-கால்வாய் 2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்க பட்டது.
மேலும் முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் இருப்பைப் பொறுத்து, ஆண்டுக்கு ஒருமுறை 18-ம் கால்வாய் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
41 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த 18-ம் கால்வாய், 44 கண்மாய்களைச் சென்றடையும். இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுள்ள விவசாயப் பகுதிகள் பயன்பெறும். நிலத்தடி நீர் பெருகும். 4,615 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு விநாடிக்கு 279 கன அடி நீர் வீதம் 9 நாள்களுக்கு 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU