வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு நிதி உதவி வழங்கிய விஜய் : ஓஓ….அப்படியா…!!!
கேரளா வெள்ளத்தால் மக்களுக்கு விளைந்துள்ள விளைவுகள் நம்ம அனைவரும் அறிந்துள்ளோம். இயற்கையின் கோரா தாண்டவத்தால் மக்கள் தங்களது உடைமைகளையும், உறவிடங்களையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் இம்மக்களுக்கு பல இடங்களில் இருந்து உதவிகரங்கள் நீளுகிறது.
இருந்தாலும், இயற்க்கை ஏற்படுத்தின அழிவை யாராலும் சரி செய்ய இயலவில்லை. கேரளா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் எத்தனை வருங்கால எடுக்குமோ தெரியவில்லை. இயற்கை எழில் மிகுந்த இப்பகுதியானது இன்று வேல கடக காட்சியளிக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். தனது ரசிகர்கள் மூலம் கேரளா மக்களுக்கு தனி தனியா உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விக்ரம் 35லட்சம், கமல் 25 லட்சம், ரஜினி 15 லட்சம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.