தான் கஷ்டத்துலயும் அடுத்தவன் கஷ்டத்தை நினைச்சி உதவுறான் பாருங்க அவன் தாங்க கேப்டன் : கேப்டன்…. கேப்டன் தான்…!!!
கேரளா மக்கள் வெள்ளத்தில் சிக்கி தற்போது கொஞ்சம் சாதாரண நிலைக்கு திரும்பி உள்ளனர் வருகின்றனர். தங்களது உடைமைகளையும் உறைவிடங்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். சிலர் கேரளா அரசின் பெயரில் நிதிகளையும் அனுப்பி வைக்கின்றனர்.
கேரளா வெள்ள நிவாரண பணிக்காக பல மாநில மக்களும் உதவி வருகின்றனர். இது மட்டுமில்லாமல், திரையுலகினரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் தனது உடல்நிலை சரி இல்லாத சூழ்நிலையிலும் கேரள மக்களுக்கு உதவி உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த், அமர்க்கவில் இருந்து சிகிட்ச்சை பெற்று திரும்பி உள்ளார். அங்கு இருந்த வந்தவுடனே அவர் தலைவர் கலைஞர் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தற்போது கேரளா மக்களின் வெள்ள நிவாரண பண்ணிக்காக 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ளார்.