கேரளா வெள்ள நிவாரண உதவிக்காக 15 லட்சம் வழங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்:
இயற்கையின் கோரா தாண்டாவத்தால் கேரளா மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. இதனையடுத்து பலரும் இம்மக்களுக்காக உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். கேரளாவையே புரட்டி போட்ட இந்த வெள்ள பாதிப்பால், அனைவரும் தங்களது உடைமைகளையும், உறைவிடங்களையும் இழந்து தவிக்கின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் ரூ.15 லட்சம் வெள்ள நிவாரண பணிக்காக வழங்கியுள்ளார். இதனை அவர் அவரது தாயுடன் சென்று முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பலரும் உதவி லஞ் நீட்டி வரும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ள நிவாரண உதவிக்கு ரூ.10 லட்சம் பணமாகவும், 5 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களையும், தனது மோகனவுடன் சென்று கேரளா முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்.