நான் ஆந்திராகாரனும் இல்லை, தமிழ்நாட்டுகாரனும் இல்லை, இந்த உலகத்தை சேர்ந்தவன்: எஸ்.பி.பி. வருத்தம்:

Default Image

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் திருவள்ளூர் மாவட்டம் கோணேட்டம்பேட்டையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊருக்கு அர்ப்பணித்துவிட்டு பேசியதாவது:

நான் இந்த மண்ணில் பிறந்தவன். எத்தனை நாடுகளுக்கு சென்றாலும் எவ்வளவு புகழ் உச் ஹிக்கு சென்றாலும், இந்த கிராமத்திற்கு வரும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. இனிஜா கிராமத்திற்கு நான் செய்த காரியம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இங்கில்லை ஒவ்வொரு தெருவுக்கும் இரண்டு கழிவறைகள் கட்டி தர விரும்பினேன். அனால் அதை விட முக்கியம் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். எனவே நான் படித்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குணீரும், கழிவறை வசதியும் ஏற்படுத்தி தருவது மிக முக்கியம் என்று முடிவு செய்து அடையும் நிறைவேற்றி உள்ளேன்.

நாம் தண்ணீரை வீணாக்க கூடாது தற்போது இரு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சமயங்களில் எப்படி தண்ணீரை சேமிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. நான் இங்கு அரசியல் பேச வரவில்லை என்றாலும், மனதில் பட்டத்தை சொல்கிறேன். எஸ்.பி.சுப்பிரமணியன் ஆந்திராகாரர் அவர் ஏன் இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்  சிலர் நினைக்கலாம். அவர்களுக்கு சொல்கிறேன் நான் அந்திரக்காரனும் இல்லை, தமிழ்நாட்டுகாரனும் இல்லை, நன் இந்த உலகத்தை சேர்ந்தவன். இவ்வாறு அவர் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்