கேரள வெள்ளம் : பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த விஷால்

Default Image

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை கேரளாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து பலரும் கேரளாவிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர். மாநில அரசுகள் பணம், மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
 
கேரளாவில் வரலாறு காணாத அளவில் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் அனைத்தையும் இழந்து, பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சேதமான பொருள்களின் மதிப்பு 20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த வெல்ல பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, அதற்கு தக்க உதவி வழங்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது : 

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, கேரளா வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுகிறேன், மேலும் நிவாரண நிதியையும் அதிகமாக வழங்கும் படி கேட்டு கொள்கிறேன். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் நம் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரத்தையும் செயல்படுத்த தேவையான உதவிகளை வழங்குங்கள் என பிரதமருக்கு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்