பரபரக்கும் தேர்தல் களம்… தெலுங்கானாவில் காங்கிரசுக்கு திமுக ஆதரவு.!

Tamilnadu CM MK Stalin - Congress MP Rahul Gandhi

தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நடந்து முடிந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் எதிர்க்கட்சியாக தொடர்ந்து வரும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2018 தேர்தலில் 19 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது காங்கிரஸ்.

தெலுங்கானாவில் 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகள் இருக்கின்றன… அமித்ஷா விமர்சனம்.!

இந்நிலையில் காங்கிரஸ் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் இருக்கும் திமுக தற்போது தெலுங்கானா காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுகவினர் செயல்பட வேண்டும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

முன்னதாக கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரசுக்கு தனது ஆதரவை திமுக தெரிவித்து தமிழகம் ஒட்டிய கர்நாடக பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திலும் திமுக உட்பட திமுக கூட்டணி கட்சியினரும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror