நெருங்கும் தேர்தல்.. அதிமுக வியூகம் என்ன.? இன்று முக்கிய ஆலோசனை.!

ADMK Secretary Edappadi Palanisamy

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துளளது.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று (நவம்பர் 21) மாலை 4 மணிக்கு, அதிமுக தலைமை அலுவலக எம்ஜிஆர் மாளிகையில் வைத்து அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது..

அதிமுக முன்னாள் அமைச்சர் வெற்றியை எதிர்த்து வழக்கு .. தீர்ப்பு ஒத்திவைப்பு!

அடுத்து 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் , மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அது குறித்து முக்கிய ஆலோசனை இன்று மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது. இளைஞர் பாசறை,  இளம்பெண்கள் பாசறை  ஆகியவை பலப்படுத்துவது பற்றி இன்று ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகி கொள்வதாக அதிமுக முன்னரே அறிவித்து விட்டது. இதனால் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளதா அல்லது தனித்து போட்டியிட உள்ளதா என்பது அதிமுகவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்