இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. பிரிக்ஸ் நாடுகள் இன்று விவாதம்.!
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்று வரை கடுமையான போர் நடந்து வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒவ்வொரு நாளும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தினர். இந்த போரினால் இரண்டு தரப்பிலிருந்து இழப்புகள் அதிகமாகிக்கொண்டு செல்கின்றன. அதிலும் காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் முதல் இஸ்ரேல் வரையில்.. இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்…
காசா சுகாதார அமைச்சகத்தின் படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுடன் போரிட்டதில் 68 ஐடிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
எனவே, சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்க போரை நிறுத்துமாறு பல உலக நாடுகள் இரு தரப்பிலும் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா சபையில் கூட இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் ஒரு சிறிய இடைநிறுத்தம் செய்யுளதாக கூறப்படுகிறது.
கேரள பள்ளியில் திடீர் துப்பாக்கி சூடு… பரபரப்பில் திருச்சூர்! நடந்தது என்ன?
இந்த சூழ்நிலைக்கு மத்தியில், காசாவில் நிலவும் நெருக்கடிகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் இன்று மெய்நிகர் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிவிப்பின்படி, இந்த கூட்டத்தை நடத்தும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தொடக்க உரையை ஆற்றுவார்.
அதைத்தொடர்ந்து காசாவில் தற்போதைய மனிதாபிமான நெருக்கடி குறித்து, மெய்நிகர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள். இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய கிழக்கின் நிலைமை குறித்த கூட்டறிக்கை ஆனது காசா பற்றிய குறிப்பிட்ட குறிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.