விமர்சனம் பண்றது வேற கிண்டல் பண்றது வேற! நடிகர் மம்முட்டி காட்டம்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் மம்முட்டி தற்போது ‘காதல் – தி கோர் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இதன் காரணமாக தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வரும் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கொச்சியில் படத்தின் ப்ரோமோஷனுக்காக மம்முட்டி, ஜோதிகா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது மம்முட்டியிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். ஒரு படம் வெளியானால் அந்த படங்களை பற்றி பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை தவறாக போடுகிறார்கள் எனவே, விமர்சனங்களை முடக்கினால் திரைப்படத் துறையை காப்பாற்றிவிட முடியுமா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி எப்படி சம்மதித்தார் தெரியுமா? இயக்குனர் சொன்ன கதை!
அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் மம்முட்டி ” படங்களும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் மக்கள் தாங்கள் பார்க்கும் படத்தைப் பற்றி தங்கள் சொந்த கருத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியம். என்னை பொறுத்தவரை விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகம் காப்பாற்றப்படும் என நான் நினைக்கவில்லை.
ஒரு படத்தை விமர்சனம் செய்வது வேறு அதைப்போல அந்த படத்தை கேலி செய்வது வேறு இரண்டுக்கும் தனி தனி அர்த்தங்கள் இருக்கிறது. எனவே, திரைப்பட விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகைக் காப்பாற்ற முடியாது ‘ என்று நடிகர் மம்முட்டி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ‘காதல் – தி கோர் ‘ படம் நன்றாக வந்திருக்கிறது. படம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும் எனவும் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025