அழியாத ஆன்மா.. நீலகிரியில் ‘அதே’ இடத்தில் ராணுவ தளபதியின் நினைவுச்சின்னம்..!
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் சூலூர் ராணுவ தளவாடத்தில் இருந்து அப்போதைய இந்திய ராணுவ தளபதியாக பொறுப்பில் இருந்தா பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராஜே மற்றும் பிற ராணுவ வீரர்கள் என மொத்தம் 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11.48க்கு புறப்பட்டனர்.
அந்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் வெலிங்டன் ராணுவ தளவாடத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது திடீரென மாறிய வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது. இதில், ராணுவ தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராஜே உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்போது உயிர்பிழைத்த ராணுவ வீரர் வருண் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து பின்னர் டிசம்பர் 15இல் உயிரிழந்தார். இதன் மூலம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக மாறியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டனில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான அந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் நிலவு தூண் எழுப்பப்பட்டுள்ளது . அதில் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தூணானது வரும் டிசம்பர் 8 2ஆம் ஆண்டு நினைவு தினத்தில் திறக்கப்பட உள்ளது.
அந்த நினைவு தூணில், ” ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதைத் துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணிராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உலர்த்த முடியாது.” என தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பதிக்கப்பட்டுள்ளது.