5 மாநிலங்களில் ரூ.1,760 கோடி மதிப்புள்ள போதைப்பொருள், பணம் பறிமுதல்- தேர்தல் ஆணையம்..!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. நவம்பர் 25-ம் தேதி ராஜஸ்தானிலும், நவம்பர் 30-ம் தேதி தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ரூ.1,760 கோடி மதிப்பிலான இலவசங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில்,  மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வகையான இலவசங்கள் மற்றும் போதைப்பொருள், பணம், மதுபானம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள்  உள்ளிடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐந்து மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு மொத்தம் ரூ. 1760 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ரூ. 239.15 கோடி மதிப்புள்ள பொருள்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை விட இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 7 மடங்குக்கும் அதிகமாகும்.

குஜராத், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த 6 மாநில சட்டசபை தேர்தல்களில் ரூ.1400 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சட்டசபை தேர்தல்களை விட 11 மடங்கு அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மிசோரமில் பணம் , விலைமதிப்பற்ற உலோகம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் ரூ.29.82 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்