மன்சூர்அலிகான் சர்ச்சை பேச்சு : வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் “ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதைப்போலவே, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை” என பேசியிருந்தார்.
இவர் இப்படி பேசியதற்கு த்ரிஷா ” மன்சூர் அலிகான் பேச்சு மிகவும் கொச்சையாக இருக்கிறது அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவரது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான எண்ணத்தை காட்டுகிறது. இனிமேல் நான் அவருடன் இணைந்து படம் நடிக்கவே மாட்டேன்” என கூறியிருந்தார்.
த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் இப்படி பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் குஷ்பூ மன்சூர் அலிகான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்து இருந்தார். அதைப்போல, பாஜக எம்.எல்.ஏ வானதி சினிவாசனும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!
இந்த நிலையில், த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மகளிர் ஆணையம் கூறியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. த்ரிஷா பற்றி ஆபாசமாக மன்சூர் அலிகான் பேசியதற்கு புகார் எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் ” பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்குபொழப்ப பாருங்கப்பா” என்பது போல கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.