உலகக்கோப்பை மைதானத்தில் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்.! கைது செய்த குஜராத் போலீசார்.!
உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இன்று குஜராத் , அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் இந்திய அணி விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வருகையில், மைதானத்திற்குள் பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவு கொண்ட ஒரு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் நுழைந்தார்.
உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அந்த ஒரு ரசிகரை வெளியேற்றினர். அதன் பிறகு குஜராத் போலீசார் கைது செய்தனர். மைதானத்திற்குள் திடிரென நுழைந்து விராட் கோலியை சந்தித்ததால் ஆட்டம் சற்று நேரம் தடைபட்டது. அந்த ரசிகர் வெளியேறிய பிறகு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது.
அந்த ரசிகர் வெளியேறிய பிறகு விராட் கோலி 50 ரன்களை கடந்து 54 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். தற்போது 31 ஓவரில் 158 ரன்கள் எடுத்திருந்தனர். கே.எல்.ராகுல் 43 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.