அந்த மாதிரி காட்சியில் நடித்த வரலட்சுமி சரத்குமார்! இப்போ இப்படி இறங்கிட்டீங்களே மேடம்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டு பிஸியான நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது தேஜா மார்னி என்பவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோடபொம்மாலி பிஎஸ்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வரலட்சுமி சரத்குமார் படம் பற்றி பேசியுள்ளார்.
அந்த மாதிரி ரோலில் நடிக்க காத்திருக்கும் ஷிவானி ராஜசேகர்! செம தில்லு தான் உங்களுக்கு!
இது குறித்து பேசிய அவர் ” நான் இதுவரை எந்த படத்திலும் புகை பிடிக்கும் காட்சியில் நடித்ததில்லை. ஆனால், ‘கோட்டா பொம்மாலி பி எஸ்’ படத்தின் கதைக்கு அவசியம் என்பதால் முதல்முறையாக புகை பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறேன். எனவே, இந்த படத்தில் நடிக்கும் போது அந்த காட்சி தான் எனக்கு சவாலாக இருந்தது. படத்தை பொறுத்தவரையில் நான் தான் ஹீரோவாக உணர்கிறேன். ஏனென்றால், படம் அப்படி தான் வந்து இருக்கிறது.
இதுவரை நான் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், தெலுங்கில் முதன் முதலாக போலீஸ் வேடத்தில் இந்த படத்தில் தான் நடித்து இருக்கிறேன். படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என நான் நம்புகிறேன். படத்தை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” எனவும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய வரலட்சுமி ” எனக்கு எல்லா விதமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது. ‘வரலக்ஷ்மி நிறைய வெரைட்டியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று மக்கள் வாயில் இருந்து வார்த்தை வரும் அளவிற்கு படங்களில் நடிக்கவேண்டும். என்னுடைய ‘ஹனுமான்’ தெலுங்குப் படம் சங்கராந்தி அன்று வெளியாகிறது அந்த படமும் நன்றாக இருக்கும் எனவும்” வரலட்சுமி கூறியுள்ளார். இதுவரை வில்லி வேடத்தில் நடித்து கலக்கி வந்த இவர் தற்போது புகைபிடிக்கும் காட்சியில் நடித்துள்ளதாக கூறியுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் இப்போ இப்படி இறங்கிட்டீங்களே மேடம் என கூறி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025