பிக் பாஸ் பிரபலம் விசித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? குடும்ப புகைப்படம் இதோ!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் விசித்ரா. இவர் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் ரதிதேவி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனையடுத்து சீதனம், ரகசிய போலீஸ், சுயம்வரம், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு தனது குடும்பத்துடன் இருந்து விட்டார்.
நீ யாரா வேணா இருந்துக்கோ! விசித்ராவை சீண்டும் நிக்சன்…பதிலடி கொடுத்த அர்ச்சனா!
இதன்பிறகு அவருக்கு சினிமாவில் மவுஸ் குறைந்தது. பின்னர் விஜய் டிவியில் டாப் ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பாகி மக்களிடைய அதிக வரவேற்ப்பைப் பெற்ற குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், குக்காக பங்கேற்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதே குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், நன்றாக சமையல் செய்து 2-வது இடத்தைப் பிடித்தார். அதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இந்த சமயத்தில் அவரது குடும்பப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விசித்ராவின் கணவர் மற்றும் மூன்று மகன்கள் இருக்கின்றனர். அவரது மூன்று மகன்களும் விசித்ராவைப் போலவே உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகான குடும்பம் என்று வாழ்த்தி வருகின்றனர். இதற்கிடையில், விசித்ராவிற்கு 2001ம் ஆண்டு திருமணம் முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025