பிரதமர் மோடியை பதற வைத்த AI – DeepFake டெக்னலாஜி.! விவரம் இதோ…

PM Modi say about Deepfake videos

ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் மின்னணு தொழில்நுட்பத்தின் தற்போதைய புதிய பரிணாம வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட AI மற்றும் Deepfake தொழில்நுட்பம் உள்ளிட்டவை ஆகும்.

தொழில்நுட்பத்தால் எந்தளவு நன்மை விளைவிக்க முடியுமோ அதே அளவுக்கு அதனை தவறாக பயன்படுத்தி தீமை விளைவிக்கவும் முடியும். அதனை எதற்காக பயன்படுத்த வேண்டும். தவறாக பயன்படுத்தினால் யார் பாதிக்கப்படுவார்கள் என அறிந்து நல்வழிப்படுத்துவதே மனிதர்கள் தலையாய கடமையாக உள்ளது.

இந்த தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை இன்று வெளிப்படுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், AI தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாராகும் தவறான வீடியோக்கள் ஆன்லைனில் பரவும் போது அதன் எச்சரிக்கைகளை வெளியிடுமாறு ChatGPT குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும், AI மற்றும் Deepfake தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் செயல்கள் கவலை அளிக்கிறது. நான் நடனமாடுவது போன்ற போலி விடியோவை நானே பார்த்தேன். தொழில்நுட்ப விஷயத்தில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஊடகங்கள் மற்றும் செயலி மூலமாக கூற வேண்டும் என்றும் பிரதமர் மோடி இன்று நடைபெற்ற விழாவில் வலியுறுத்தினார்.

அண்மையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலியாக ஒரு வீடியோ தயாரித்து சில விஷமிகள் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, சைபர் கிரைமில் புகார் கூறினார். அதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு போலி வீடியோ தயார் செய்து வெளியிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson