வருகிறது அபாயம்..! தாமிரபரணி ஆற்று கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணையிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆறு , பரளியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மழை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 76 அடியைத் தாண்டியதால், அணையில் இருந்து நேற்று காலை ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறு , பரளியாறு ஆகிய ஆறுகளின் கரையோரம் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது .
DINASUVADU