உலகக்கோப்பை இறுதிப்போட்டி..ரசிகர்களுக்கு சர்பிரைஸ் தரும் இந்திய விமானப்படை.!

air show

கடந்த அக்டோபர் 5ம் தேதித் தொடங்கிய 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்த தொடரில் விளையாடிய 10 அணிகளில் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியது.

இதைத்தொடர்ந்து இரண்டு அரையிறுதிப் போட்டிகள் முறையே நேற்று (15.11.2023) மற்றும் நேற்று முன்தினம் (16.11.2023) நடைபெற்றது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில், நடப்புத் தொடரில் தான் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் தோல்வியடையாத பலம் வாய்ந்த இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதியது.

பிஃபா உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் கத்தாரை வீழ்த்தி இந்தியா வெற்றி.!

அந்த போட்டியில் 397 ரன்கள் எடுத்த இந்தியா அணி, 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் 215 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனால் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன், ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது.

டாஸ் வீசுவதில் ரோஹித் முறைகேடு..? வாசிம் அக்ரம் கூறுவதென்ன.?

இந்த போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதிப் போட்டிக்கான ஒரு அற்புதமான நிறைவு விழாவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் சர்வதேச நட்சத்திரம் துவா லிபா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டித் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக, அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு, விமான சாகசங்களை (ஏர் ஷோ) நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்